சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, 'ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள்: ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
போலீசார் கையில் லத்தி எடுக்க தடை